வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (19:14 IST)

தனுஷின் ‘மாறன்’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர்
 
அந்த வகையில் சற்று முன்னர் அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது என்பதும், இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்பதும் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே பத்திரிகையாளர்கள் ஆக இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.