Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷ் மனசை இப்படி காயப்படுத்தலாமா?

Sasikala| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (11:01 IST)
முப்பது வயதுக்குள் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர்கள் என்ற பட்டியலை பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ளது.  இதில் கௌதம், கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி மோகன், கார்த்திக் நரேன் என பலரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.28 வயதில் காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி இளைஞர்களிடையே காதல் சுவையை ஊட்டிய செல்வராகவனின்  பெயர் இல்லை.
 
காதல் கொண்டேன் படத்துக்கு முன்பு துள்ளுவதோ இளமை படத்தையும் செல்வராகவன்தான் இயக்கினார். அறிமுகம்  என்பதால் படம் வியாபாரமாகாது என செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜாவின் பெயரில் அப்படம் வெளியானது.
 
30 வயதிற்குள் கவனம் ஈர்த்தவர்களில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர் செல்வராகவன். தனது அண்ணனின் பெயர்  பட்டியலில் இல்லாதது கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தியது என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
 
செல்வராகவனை மறந்திட்டீங்களா இல்லை மறக்கடிச்சிட்டீங்களா?
இதில் மேலும் படிக்கவும் :