Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிக்காக 15 கதைகள் வைத்திருக்கும் தனுஷ்


cauveri manickam| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (16:17 IST)
ரஜினியை இயக்குவதற்காக 15 கதைகளை வைத்திருக்கிறாராம் தனுஷ்.

 

 
வயதானபிறகும் கூட சிங்கத்துக்கான கெத்து குறையாமல் இருக்கிறார் ரஜினி. இன்னும் எத்தனைப் படங்களில் நடிக்க அவர் உடல்நலம் கைகொடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், இயக்குநராக இருக்கும் பெரும்பாலானோருக்கு, ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. ஊர் உலகமே இப்படி ஆசைப்படும்போது, சொந்த மருமகனான தனுஷுக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன?

‘பவர் பாண்டி’ மூலம் தன்னைச் சிறந்த இயக்குநராக நிரூபித்துள்ள தனுஷ், ‘விஐபி 2’ படத்துக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். அவர் அடுத்ததாக இயக்கும் படத்தில், ரஜினி நடிக்கலாம் என்கிறார்கள். மாமனாருக்காக 15 ஒன்லைன் கதைகளைத் தயாராக வைத்துள்ளாராம் தனுஷ். அதில் எதை ரஜினி ஓகே சொல்கிறாரோ, அது திரைக்கதையாக வடிவம் பெறும் என்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :