வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:40 IST)

திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் குழுவில் இருந்து தனுஷ் பட நடிகை நீக்கம்

கேரள திரைப்பட வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் குழுவில் இருந்து நடிகை பார்வதி நீக்கப்பட்டுள்ளார்.
 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை பார்வதி. இவர், தமிழ் சினிமாவில் பூ, சென்னையில் ஒரு நாள், தனுஷின் மரியான், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல திரைபடங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் நடிப்பதுடன், கேரளம் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர் குழுவில் பொறுப்பு வகித்து வந்தார்.

 
இந்த நிலையில், 'திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகளை பார்வதி விமர்சித்து வந்த நிலையில், திரைப்பட பெண்கள் கூட்டமைப்பில் உள்ள நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக' குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, 'சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லாலுக்கு எதிராக'வும் விமர்சித்திருந்தார்.

அவரை திரைப்பட வளர்ச்சிக்கழக குழுவில் இருந்து நீக்க வேண்டுமென்று மலையாள சினிமா பிரபலங்கள் குரல் எழுப்பினர். பார்வதியும் அக்குழுவில் தொடர தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.

எனவே,  அம்மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகக் குழுவில் இருந்து  நடிகை பார்வதி  நீக்கப்பட்டுள்ளார்.