ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (15:50 IST)

நேருக்கு நேர் மோதும் தனுஷ் & சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளன.

சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை வைத்து எதிரிநீச்சல் மற்றும் காக்கிச் சட்டை ஆகிய படங்களை தயாரித்தவர் தனுஷ். நகமும் சதையுமாக இருந்த இவர்கள் இருவரின் நட்பு சமீபகாலமாக முன்னர் போல இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரின் படமும் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளது. தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளன. இருவரில் யாருடைய படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது.