திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (16:07 IST)

கையில் ரெண்டு இயக்குனர்களை வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு தூண்டில்போடும் தயாரிப்பாளர்!

தயாரிபபாளர் கலைப்புலி தாணு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

தமிழில் பல காலமாக திரைப்படம் எடுத்து அதை வித்தியாசமான முறையில் மார்க்கெட்டிங் செய்து லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்களில் கலைப்புலி தாணு முதன்மையானவர். இப்போது வரிசையாக தனுஷை வைத்து படம் எடுத்து வரும் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் பக்கம் நகர முயற்சி செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயனை அணுகிய அவர் இயக்குனர்கள் வெங்கட்பிரபு அல்லது சிறுத்தை சிவா ஆகியவர்களில் ஒருவரை வைத்து படம் பண்ணலாம் என்றும் இருவரிடம் பேசி வைத்துள்ளதாகவும் சொல்லியுள்ளாராம். இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிறுத்தை சிவா காம்பினேஷனில் ஒரு படம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.