வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:30 IST)

சென்னையின் முக்கியத் திரையரங்கைக் கைப்பற்றும் பிவிஆர் சினிமாஸ்!

பிவிஆர் நிறுவனம் இந்திய அளவில் மால்களில் சினிமா திரையரங்குகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையின் முக்கியத் திரையரங்கான சத்யம் திரையரங்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பி வி ஆர் நிறுவனம் சினிமா விநியோகத்திலும் இறங்க முடிவு செய்துள்ளதாம்.

இந்நிலையில் இப்போது சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான தேவி திரையரங்கை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த தகவல் தேவி திரையரங்கு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தேவி புதுப்பிக்கப்படும் என தெரிகிறது.