1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (12:31 IST)

’தேவாரா’படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் ‘பத்தவைக்கும் பார்வைக்காரா... வெளியானது!

கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் உருவாகி உள்ளது. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே ஆகியோர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்க, மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.
 
சமீபத்தில், இந்தப் படத்தில் இருந்து வெளியான ‘ஃபியர் சாங்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அனைத்து தளங்களிலும் டிரெண்டிங்கில் இருந்தது. இந்தப் பாடலில் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்று, ’தேவாரா’வின் இரண்டாவது சிங்கிள் ’பத்தவைக்கும் பார்வைக்காரா...’ வெளியாகி இருக்கிறது. இந்த பாடலில் என்டிஆர் ஸ்டைலாகவும், ஜான்வி கபூர் சார்மிங் லுக்கிலும் உள்ளனர். ராமஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ள இந்தப் பாடலில் என்டிஆர் மற்றும் ஜான்வியின் நடனமும் அவர்கள் ரொமான்ஸும் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. பாஸ்கோ மார்டிஸ் கோரியோகிராஃபியில் கடற்கரையில் ஜான்வியின் ஈர்க்கும் தோற்றமும் என்டிஆரின் நடன அசைவுகளும் பிரமிக்க வைக்கின்றன.
 
அனிருத் இசையப்பில், தீப்தி சுரேஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல் இந்த வருடத்தின் சிறந்த ரொமாண்டிக் மெலோடிகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 
 
இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த அதிரடி ஆக்‌ஷன் கதையின் முதல் பாகம் 'தேவரா: பாகம் 1' செப்டம்பர் 27 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.