புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (09:59 IST)

4 வருடங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம்: ரகசியத்தை வெளியிட்ட தீபிகா படுகோன்

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் பிரபல நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். இதுவொரு காதல் திருமணம் என்றபோதிலும் இந்த திருமணம் நான்கு வருடங்களுக்கு முன்னரே நிச்சயிக்கப்பட்டது என்ற ரகசியத்தை தற்போது தீபிகா வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபிகா, இயக்குனர் பஞ்சாலி இல்லத்தில் நடந்த விருந்து ஒன்றின்போதுதான் தான் ரன்வீர்சிங்கை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதாகவும், அதன்பின் அவர் மீது காதல் ஏற்பட்டதாகவும், இந்த விஷயம் இரு வீட்டார்களுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்னரே தெரியும் என்றும், அப்போதே தங்களது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ரன்வீர்சிங்-தீபிகா கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்தாலும் இருவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்னரே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.