புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 18 நவம்பர் 2023 (00:50 IST)

கஜோல், கரீனா கபூரின் டீப் ஃபேக் வீடியோ வைரல்...

kajol
ராஷ்மிகா மந்தனாவின் டீப் போலி வீடியோவை தொடர்ந்து, பாலிவுட் நடிகைகளான  கரீனா கபூர், கஜோல் ஆகியோரின் டீப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது புகைப்படத்தை மார்பிங் செய்து போலி வீடியோ ‘DeepFake Edit ‘ சமீபத்தில்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
 
ஏஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் இதற்கு அமிதாப் பச்சன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இதுகுறித்து அவர்  ''நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான போலி வீடியோ விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சினிமாத்துறையினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து, பாலிவுட் நடிகை கரீனா கபூர், கஜோல் ஆகியோர் டீப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த போலி வீடியோ விவகாரம் தொடர்பாக சமீபத்தில்  மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. அதில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் கூடிய ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.