வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (22:51 IST)

பவர்பாண்டி' டப்பிங்கில் தனுஷை கலாய்த்த டிடி-ரோபோசங்கர்

தனுஷ் முதன்முதலாக இயக்கியுள்ள 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இன்று முதல் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.



இன்று நடைபெற்ற டப்பிங்கில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த டிடி என்ற திவ்யதர்ஷினி மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் டப்பிங் செய்தனர்.

டப்பிங்கிற்கு முன்னர் தனுஷ் டிடி மற்றும் ரோபோசங்கரிடம் டப்பிங் தெறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே டப்பிங் தியேட்டருக்குள் நுழைந்தவுடன் டிடியும், ரோபோ சங்கரும் அனல் தெறிக்க சத்தம் போட்டு டப்பிங் செய்தார்களாம். இதனால் தனுஷ் காதை மூடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாம்.

டிடியும், ரோபோசங்கரும் ஒன்றாக இணைந்து விஜய்டிவியில் வேலை பார்த்தபோது இதுபோன்ற கலாட்டாக்களை செய்வதுண்டு என்றும், அந்த கலாட்டாவை தனுஷ் முன்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது