1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (17:28 IST)

’பிகில் ’ சாதனையை முறியடிக்காத ’தர்பார்’...

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் , ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்திருக்கும் தர்பார் படத்தின் டிரைலர் நேற்று ரிலீசானது. இது இந்திய அளவில் சாதனை படைத்து பிகில் பட டிரைலரின் சாதனையை முறியடிக்கும் என ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதுகுறித்து விவரங்களை இப்போது பார்க்கலாம்,

பிகில் பட டிரைலர் 2 மணி நேரம் 45 நிமிடங்களில் சுமார் 1 கோடி பார்வையாளர்களையும் 1 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளையும் பெற்று, ஷாருக்கானின் ஜீரோ படத்தின் சாதனையை முறியடித்தது.

 
இந்நிலையில்,ரஜினி நடிப்பில் தர்பார் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அப்போது, பிகில் படத்தின் சாதனையை முறியடிக்கும் என ரஜினி ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தர்பார் படத் தயாரிப்பு நிறுவனம் மூன்று மொழிகளில்  பார்வை எண்ணிக்கையை சேர்த்து 2 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அதே சமயம் தமிழ் டிரைலரை விட ஹிந்தி டிரைலர் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிறது.