Widgets Magazine

‘தர்பார்’ வில்லன்! தரமான அப்டேட்!

Last Modified புதன், 17 ஏப்ரல் 2019 (16:25 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தின்  வில்லன் நடிகர் பற்றிய சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. 


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தில் வில்லனாக நடிகர் ப்ரதீக் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் நடிகர் பிரதீக் வில்லனுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதீக் நடித்த பாகி 2 படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்துள்ளார் என்றும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி வெர்ஷனில் பிரதீக் நாயகனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :