Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தங்கல் ரீமேக்கில் அஜித் - பிரபல நடிகையின் கொலவெறி ஆசை

Sasikala| Last Modified வியாழன், 29 டிசம்பர் 2016 (11:01 IST)
தங்கல் திரைப்படம் தமிழகத்தில் நேரடி தமிழ்ப் படங்களைவிட அதிக வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை  ரீமேக் செய்ய வாய்ப்பேயில்லை. ஆனாலும், ரசிகர்களுக்கு அப்படியொரு ஆசை இருக்குமே.

 
நீது சந்திராவிடம், ரசிகர் ஒருவர், தங்கல் ரீமேக்கில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ட்விட்டரில் கேட்க, அவர்  அஜித்தை இழுத்துவிட்டிருக்கிறார். அஜித் ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன், அவரால் மட்டுமே தங்கல் அமீர் கான் வேடத்தில் நடிக்க  முடியும் என்று பதிலளித்துள்ளார்.
 
முதுகுப்பகுதியில் பதினோரு அறுவை சிகிச்சை செய்துகொண்டு அதற்காக இப்போதும் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்  அஜித்தை மல்யுத்தம் செய்ய வைப்பதில் நீது சந்திராவுக்கு அப்படியென்ன ஆர்வமோ?
 
ஒய் திஸ் கொலவெறி மேடம்?


இதில் மேலும் படிக்கவும் :