1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph

இரண்டாவது மனைவியுடன் முதல் திருமண நாள் - டி இமான் வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான்  கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகாரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். 
 
இதையடுத்து கடந்த வருடம் டி.இமான், எமிலி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர்கள் முதலாவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள் அதன் அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக லைக்ஸ் குவிந்து வருகிறது. 
 
இமான் தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இவர் மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.