செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 மே 2022 (11:13 IST)

”இவ்ளோ சீக்கிரம்.... நான்தான் முட்டாள்”…. இமானின் முன்னாள் மனைவியின் லேட்டஸ்ட் டிவீட்!

இசையமைப்பாளர் டி இமான் மறுமணம் செய்துகொண்டது சம்மந்தமாக அவரின் முன்னாள் மனைவி மோனிகா பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டி இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது .

அதையடுத்து அமலி என்ற பெண்ணை டி இமான் மறுமணம் செய்துகொண்டார். அமலி, திரையுலகில் கலை இயக்குனராக இருந்த உபால்டு என்பவரின் மகள் எமிலி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் மே 15 ஆம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து இமான் திருமணப் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர அது வைரலானது.

இந்நிலையில் இமானின் முன்னாள் மனைவியான மோனிகா இந்த திருமணம் குறித்து பகிர்ந்துள்ள டிவீட் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “உங்கள் இரண்டாவது திருமணத்துக்கு வாழ்த்துகள்.  12 வருடம் உங்களோடு வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியுமென்றால், உங்களோடு வாழ்ந்த நான்தான் முட்டாள். நான் அதற்காக வருத்தபடுகிறேன். நீங்கள் நம் குழந்தையை 2 ஆண்டுகளாக பார்க்கவோ அல்லது அவர்களுக்காக நேரம் செலவிடவோ இல்லை. ஆனால் இப்போது நீங்கள் அவர்களுக்கும் ஒரு மாற்றுக் குழந்தையைப் பெற்று விட்டீர்கள். நான் உங்கள் தந்தையிடம் இருந்து என் குழந்தைகளைக் காப்பாற்றுவேன். தேவைப்பட்டால் அந்த புதிய குழந்தையையும் காப்பாற்றுவேன். இனிய திருமண வாழ்த்துகள்”  என்று கூறியுள்ளார்.