1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM

ஆடையை விமர்சித்து கேவலமான பதிவு: ரகுல்பிரீத் சிங் பதிலடி

ரகுல்பிரீத் சிங் தமிழ் படங்களில் அறிமுகம் ஆனாலும் ஆந்திராவில் முன்னணி நடிகையாக உயர்ந்த பின்னே பிரபலம் ஆனார். அதன் பின்னர்  கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழில் பிரபலம் ஆனார்.
தற்போது மீண்டும் கார்த்தி ஜோடியாக தேவ், சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடிக்கிறார். 
 
நடிகை ரகுல்பிரீத் சிங் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் காரில் இருந்து கவர்ச்சி  உடையில் அவர் இறங்கி வரும் புகைப்படம் வைரலானது. அந்த படத்தை பார்த்து பலர் இப்படி கேவலமான உடை அணியலாமா? பேண்ட் அணிய மறந்து விட்டீர்களா என்றெல்லாம் ரகுல் பிரீத் சிங்கை கடுமையாக விமர்சித்தனர், இந்நிலையில் ஒருவர் ரகுலை மிககேவலமாக பேசி மோசமான கருத்தை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
 
இதற்கு ரகுல்பிரீத் சிங் பதிலடி கொடுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–
 
"உன்னுடைய அம்மா காரில் இருந்து இறங்கி வந்தால் இப்படித்தான் பேசுவாயா. பெண்களை மதிக்க உன் தாயிடம் அறிவுரை கேள். அதன்படி  நடந்துகொள். உன்னைப் போன்றவர்கள் இருப்பது வரை பெண்கள் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியாது. பெண்கள் பாதுகாப்பு,  அவர்களுக்கு சம உரிமை வழங்குவது என்ற விவாதம் எல்லாம் உதவாது".
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.