Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி, தனுஷுக்கு ஒரு வாரம் தான் அவகாசம்

cauveri manickam| Last Updated: வெள்ளி, 16 ஜூன் 2017 (13:01 IST)
‘காலா’ படம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க, ரஜினி மற்றும் தனுஷுக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மூலக்கதை தன்னுடையது என்று கூறி கே.ராஜசேகரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘1996ஆம் ஆண்டு இயக்குனர் ரவிக்குமார் மூலம் ‘கரிகாலன்’ மற்றும் ‘உடன்பிறவாத தங்கச்சி’ ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். படத்தின் கதை மற்றும் மூலக்கரு குறித்து ரஜினியை, அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளேன். என் படைப்பை, அவர்கள் வேறொரு வடிவில் தயாரிக்கின்றனர். எனவே, அதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்துப் பதிலளிக்கும்படி ரஜினி, பா.இரஞ்சித், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பா.இரஞ்சித், ரஜினி, தயாரிப்பாளர் தனுஷ் ஆகியோருக்கு, பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.


 


இதில் மேலும் படிக்கவும் :