Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனி அறையில் தனுஷை விசாரணை செய்த நீதிபதி. நடந்தது என்ன?


sivalingam| Last Modified வெள்ளி, 10 மார்ச் 2017 (07:22 IST)
தனுஷ் தங்களுடைய மகன் என்றும் சிறு வயதில் பிரிந்து சென்ற அவரை தங்களுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது.

 


இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில் தனுஷ் ஆஜரானார். அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை வரும் 20ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வழக்கு தொடுத்த தம்பதியினர் மற்றும் தனுஷ் ஆகியோர்களை நீதிபதி தனி அறையில் விசாரணை செய்ததாகவும், இந்த விசாரணை வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த விசாரணை குறித்து வரும் 20ஆம் தேதி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :