வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (16:44 IST)

இனி கங்கனாவோடு பணியாற்ற மாட்டோம்… ஆடை வடிவமைப்பாளர்கள் டிவீட்!

சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத்தோடு இனிமேல் எப்போதும் பணியாற்ற போவதில்லை என்று ஆடை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய கொரோனா நிலவரம் குறித்து பாப் பாடகி ரிஹானா பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு முதலாக அடிக்கடி இவரது ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இவரது ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய, வன்முறையை தூண்டும் வகையில் அவரது பதிவுகள் இருப்பதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து தொழில் ரீதியாகவும் இப்போது கங்கனா நெருக்கடியை சந்தித்து வருகிறார். பாலிவுட்டின் முக்கிய ஆடை வடிவமைப்பாளர்களான ஆனந்த பூஷன், ரிம்ஸின் தாது ஆகிய இருவரும் இனிமேல் எப்போதும் கங்கனாவோடு இணைந்து பணியாற்ற போவதில்லை என அறிவித்துள்ளனர்.