வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:41 IST)

கொரோனா...நடுத்தர மக்களை நாயா அலையவிடும்- பிரபல நடிகரின் டுவீட்டுக்கு டிவி தொகுப்பாளர் ரீடுவீட்

கொரோனாவால் உலகில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளது என  நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பிரபல தொகுப்பாளர் அஞ்சனா ராகவன் ரீடுவீட் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் அடுத்து வருவது மிக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில்,  பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில்   நேற்று  ஒரு பதிவிட்டிருந்தார். அதில், கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும் எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்  எனத் தெரிவித்திருந்தார்.

 இதற்கு நடிகையும், பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான  அஞ்சலி ரங்கன் தனது டுவிட்டர் பக்கத்தில், உண்மை நடுத்தர மக்களி நாயாக அலையவிடும் …இதையும் சேத்துக்கங்க என ரீடுவீட் பதிவிட்டுள்ளார்.