வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 19 மே 2021 (22:04 IST)

ரியாலிட்டி ஷோவில் 6 பேருக்கு கொரொனா ...ஃபிலிம் சிட்டிக்கு சீல்

அரசு விதித்துள்ள கொரொனா விதிகளை மீறி  தனியார் தொலைகாட்சி சார்பில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டதால் படப்பிடிப்புக்கு சீல் வைக்கப்பட்டது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்சியில் மலையாள தொலைகாட்சி சார்பில் பிரபல ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 6 பேருக்கு கொரொனாதொற்று உறுதியானது.

எனவே அரசு விதித்துள்ள கொரொனா விதிகளைப் பின்பற்றாததால் ரியாலிட்டி ஷோ நடைபெற்ற படப்பிடிப்பு தளத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அங்கு பரப்ரப்பு ஏற்பட்டது.

கொரொனா தொற்றுடன் தனிமையில் உள்ளவர்கள் வெளியே நடமாடினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.