திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (16:35 IST)

விஜய் சேதுபதி படத்தில் குக் வித் கோமாளி நடிகர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்க உள்ளார்.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். ஆனால் இவர்கள் கூட்டணியில் கடைசியில் உருவான சீமராஜா படம் தோல்வி அடைந்ததால் கூட்டணி ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் எம் ஜி ஆர் மகன் என்ற படத்தை தயாரித்து இயக்கி முடித்துள்ளார் பொன்ராம். அதையடுத்து இப்போது விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்துக்கான பணிகளை இப்போது இயக்குனர் பொன்ராம் செய்து வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனராம். 2018 ஆம் ஆண்டு மிஸ் பெமினா அழகிப் பட்டம் வென்ற அனு கீர்த்திவாசன்தான் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். 

பொன்ராம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் எப்போதும் அவர் படத்தில் சூரி இடம்பிடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் ஒப்பந்தமாகியுள்ளாராம்.