வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (17:18 IST)

மேயாத மானை தொடர்ந்து டாப் கியரில் நடிகை ப்ரியா பவானி சங்கர்

சின்னத் திரையிலிருந்து 'மேயாத மான்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கதாநாயகனாக நடிகர் வைபவ் நடித்துள்ளார். மேயாத மான் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. ப்ரியா பவானிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ நேற்று படத்தை பார்த்து ரசித்ததாகவும், ‘மேயாத மான்’ படக்குழுவை பாராட்டியதாகவும் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
 
இந்தப் படம் பார்த்த பல முன்னணி நடிகர்கள் ப்ரியா பவானியைப் பாராட்டுவதோடு, நடிக்க வாய்ப்பும் தருகின்றனர். இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் கார்த்தியை வைத்து எடுக்கும் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்பட்டது. அடுத்து கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜூங்கா படத்தில் நடிக்க உள்ளதாகவும்  கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக ப்ரியா  பவானி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றிலும் ப்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் உலா வருகிறது.