புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (18:10 IST)

'புஷ்பா' பட இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள் !

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் இசைப்பாளருக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில நாட்கள் முன்னதாக வெளியாகி வைரலானது.
 
அதை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் ஐட்டம் பாடலான ஒ சொல்வியா மாமா என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொலிவியா மாமா மற்றும் சாமி ஆகிய பாடல்கள் மொழி கடந்து பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின்  இசையமைப்பாளர் தேவி.ஸ்ரீ. பிரசாத் மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது அடுத்தடுத்த படங்களிலும் இதுபோல் ஹிட் கொடுக்க வேண்டுமென  ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.