1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (21:39 IST)

லப்பர் பந்து’ நாயகி மீது வழக்குப்பதிவு.. பிரபல நடிகை கொடுத்த புகாரால் பரபரப்பு..!

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற 'லப்பர் பந்து' படத்தின் நாயகி சுவாசிகா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது, அவர் மீது புகார் கொடுத்தவர் ஒரு பிரபல நடிகையென்றும், இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மலையாளத் திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வரும் சுவாசிகா, 'லப்பர் பந்து' படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமாகியிருக்கிறார். ஆனால், அவர் மீது தற்போது மற்றொரு நடிகையால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிஷன் வெளிவந்தபோது, திரையுலகில் பல நடிகைகள், பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார்கள் அளித்தனர். அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இந்த புகாரும் வந்திருக்கிறது.
 
சுவாசிகா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு வழங்கிய பேட்டியில், புகார் அளித்த நடிகையை பற்றிய சர்ச்சை கருத்துகளை தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஹேமா கமிஷனில் புகார் அளித்த அந்த நடிகை, சுவாசிகாவுக்கு எதிராக காவல்துறையில் முறையிட்டுள்ளார். இப்போது இந்த புகாரின் அடிப்படையில் சுவாசிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விரைவில் விசாரணை நடைபெறவிருக்கின்றது, இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 
 
Edited by Siva