Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அறிவிப்பை அடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்

Sasikala| Last Modified புதன், 27 செப்டம்பர் 2017 (11:58 IST)
பிக்பாஸ் வீட்டில் 93 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளது. இரண்டு நாளாக டாஸ்க்குகள் கடினமானதாக இல்லை என்பதால் அனைவரும் வேக்கப் பாடலுக்கு மிக உற்சாகமாக நடனம்  ஆடினார்கள்.

 
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிய இருக்கிறது, அதோடு அந்த முதல் பரிசு தொகை 50 லட்சத்தை ஜெயிக்கப்போகும் பிரபலத்தை அரிய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
 
இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் ஹரிஷ், சிநேகன், பிந்து, கணேஷ் என 4 பேரும் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சியின் முடிவில் பிக்பாஸ் அறிவிப்பு ஒன்று வந்தது.  அதில் லிவிங் ஏரியாவில், ஒரு பொட்டி ஒன்றில் ரூ. 10,00,000 இருப்பதாகவும், அதனை யாருக்கு வேண்டுமோ அவர்கள் எடுத்து  கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார் பிக்பாஸ். அது என்னவென்றால் அதை எடுத்து கொள்பவர்கள் பிக்பாஸ்  வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதாகும்.
 
தற்போது வந்துள்ள ப்ரொமோ வீடியோவில் இந்த விஷயத்தைப் பற்றிதான் ஹரிஷ், சிநேகன், பிந்து, கணேஷ் ஆகிய நால்வரும் கலந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :