மகளுக்கு போட்டியாக நாயகி ரோல் நடிக்கும் மேனகா சுரேஷ்

Sasikala| Last Updated: வியாழன், 15 ஜூன் 2017 (16:34 IST)
நடிகை மேனகா சில தமிழ் படங்களில் நடித்துவிட்டு மலையாளப்பட தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்தார். இவரது மகள்  கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முதல்தர நாயகியாக வளர்ந்து வருபவர். சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் பட வேலைகளை மேனகா சுரேஷ் கவனித்து  வருகிறார்.
 
 
இவரது அம்மா மேனகா 80களில் முன்னணி நடிகையாவார். இவர் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதன் முதற்கட்டமாக  நடிகர் பிரதாப்புடன் குறும்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். பிரபல பெண் இயக்குனர் லிஜு கிருஷ்ணா இயக்கும் இமா என்ற குறும்படத்தில் நடிகரும் இயக்குனருமாகிய பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக மீண்டும் நாயகியாக மேனகா சுரேஷ் அறிமுகமாக  உள்ளார். இந்த குறும்படத்தின் டீசரை திலிப் வெளியிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :