வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (12:29 IST)

தமிழுக்கு வரும் அஞ்சலியின் காமெடி பேய் படம்

தமிழுக்கு வரும் அஞ்சலியின் காமெடி பேய் படம்

அஞ்சலி பேயாகவும், பெண்ணாகவும் இரு வேடங்களில் நடித்த படம், கீதாஞ்சலி. 2014 -ல் வெளியான இப்படம் ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றது.


 
 
ராஜ் கிரன் இயக்கத்தில் ஸ்ரீனிவாச ரெட்டியும், அஞ்சலி, பிரம்மானந்தம் நடித்த இந்த பேய் படம் வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டது. சினிமா கதையாக வில்லனிடம் சொல்லப்படும் ஒரு பேய் கதை, உண்மையில் அந்த வில்லன் சம்பந்தப்பட்டது. அவன் கொன்ற பெண்தான் பேயாக இருக்கிறார். 
 
சுவாரஸியமான திரைக்கதையில் அமைந்த இந்தப் படத்தை ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தமிழில் எடுக்கிறார். ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தை இயக்கிய பிரசாத் இந்த தமிழ் தழுவலை இயக்க உள்ளார்.
 
பேய் ஓட்டும் டாக்டராக வரும் பிரம்மானந்தத்தின் வேடத்தை மொட்டை ராஜேந்திரனுக்கு கெடுத்திராதீங்க... 
 
ப்ளீஸ்.