புதன், 9 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2016 (17:56 IST)

நாயகனாகும் காமெடி இசையமைப்பாளர்

நாயகனாகும் காமெடி இசையமைப்பாளர்

அதென்ன காமெடி இசையமைப்பாளர் என்று குழம்ப வேண்டாம். காமெடி வேடங்களிலும் நடிப்பதால் இந்தப் பெயர்.


 
 
சித்தார்த் விபின் என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவிடம் கதைவிட்டு, விஜய் சேதுபதியிடம் கும்மாங்குத்து வாங்கும் எக்ஸ்ட்ரா லார்ஜ் கொழுக்கட்டை போலிருக்கும் நடிகர்தான் சித்தார்த் விபின். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.
 
அடிப்படையில் இவர் ஒரு இசையமைப்பாளர். ஜாக்சன் துரையில் உங்களை மிரட்டுவதும் இவரது இசைதான். 
 
ஜீ.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி என்று இசையமைப்பாளர்கள் வெற்றிகரமான நடிகர்களாக வலம்வரும் காலம் என்பதால் ஒருசில இயக்குனர்கள் கதையுடன் இவரையும் வலம் வருகிறார்கள். காமெடி வருகிறது, காதலும், ஆக்ஷனும் மட்டும் வராமலா போய்விடும் என்று சித்தார்த் விபினும் ஹீரோவாக நடிக்க தலையசைத்திருக்கிறார்.
 
விரைவில் ஒரு கொழு கொழு ஹீரோ தமிழுக்கு கிடைக்கவிருக்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்