1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (10:44 IST)

துப்பாக்கிகள் சூழ விக்ரம்… கோப்ரா ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்!

கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

விக்ரம் நடித்துவரும் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்  கொரோனா ஊரடங்கினால் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.

அதில் விக்ரமை சுற்றி துப்பாக்கிகளாக வைக்கப்பட்டு இருக்க அவர் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே விக்ரம் 7 விதமான கெட் அப்களில் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.