மைண்ட் யுவர் வேர்ட்ஸ்; ஓவியாவை சீண்டிய நமீதா: அடுத்த மோதல் ஆரம்பம்!

மைண்ட் யுவர் வேர்ட்ஸ்; ஓவியாவை சீண்டிய நமீதா: அடுத்த மோதல் ஆரம்பம்!


Caston| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (12:54 IST)
தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் யாராவது மோதிக்கொள்வார்கள். இந்த வாரம் நமிதா ஓவியா இடையே மோதல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
இன்று வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோ ஒன்றும் அதனை பிரதிபலிக்கும் விதமாகவே உள்ளது. நடிகை ஓவியா ஒவ்வொரு வாரமும் வெளியேற்றத்துக்காக நாமினேட் செய்யப்பட்டாலும் ரசிகர்களின் பேராதரவால் அவர் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
 
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு நடிகை ஓவியா மீது பொறாமை ஏற்பட்டுள்ளது போல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் கணேஷ் தலைவராக இருந்தார். இந்த வாரம் யார் தலைவர் என்பதை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது.

 

 
 
அதில் நடிகை ஓவியா, நமீதா மற்றும் நடிகர் ஷக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இரண்டு கைகளில் எதையோ தாங்கிக்கொண்டு சேரில் அமர்வது போன்ற நிலையில் சேர் இல்லாமல் இருக்க வேண்டும். அதில் நடிகை ஓவியா சரியான பொசிஷனில் இல்லை என நமீதா குற்றம் சாட்டுகிறார்.
 
ஆனால் ஓவியா சரியான பொசிஷனில் தான் இருக்கிறார். அதனால் நடிகை ஓவியா பதிலுக்கு நமீதா தான் இதிலிருந்து டிஸ் குவாலிஃபை என கூற நமீதா அதற்கு மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஓவியா என அவரை சீண்டினார். இந்நிலையில் இந்த வாரத்தில் நமீதாவுக்கும் ஓவியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :