1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (18:49 IST)

திரையுலகினர் என் மகன் திருமணத்திற்கு வரவேண்டாம்: நாகார்ஜுனா அதிரடி!!

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறயுள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


 
 
இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்கவுள்ளது. 
 
திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகத்தினருக்கு அழைப்பில்லை.
 
இதனை நாக சைதன்யாவின் அப்பாவான நாகார்ஜுனாவே இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சமந்தாவிற்கும், நாக சைதன்யாவிற்கும் திரையுலகில் பல நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும் அவர்களுக்கு அழைப்பு இல்லை என கூறப்பட்டது. 
 
ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகத்தினரை அழைக்க உள்ளார்களாம்.