1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (20:03 IST)

நாளை முதல் ஓடிடியில் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’: தமிழிலும் வெளியாகிறது

நாளை முதல் ஓடிடியில் கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனட்’
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘டெனட்’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியானது என்பது தெரிந்ததே
 
இந்த படம் கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது
 
இந்த நிலையில் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை முதல் அதாவது மார்ச் 31ஆம் தேதி முதல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு இந்தி ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் இந்தியாவில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் இன்று இரவு 12 மணி முதல் இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது