1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:36 IST)

தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் ஆன நடிகரின் மகன்!

பிரபல நகைச்சுவை நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த ஆண்டு வெற்றி பெற்றது சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியாகின. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்தின் மகன் ஸுரூஜன் இந்திய அளவில் 75 ஆவது இடத்தைப் பிடித்து இருந்தார். மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இது அவரது முதல் முயற்சியாகும்.

இந்நிலையில் இப்போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.