செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (08:41 IST)

வெற்றி மூலம் பதிலடி கொடுத்த சின்மயி: நொந்துபோன டப்பிங் யூனியன் நிர்வாகி

டப்பிங் யூனியனில் தனது பணியை தொடரலாம் என நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் தன்னை பழித்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.
வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சின்மயி மீது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
 
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டப்பிங் யூனியன் விதித்த தடைக்கு மீண்டும்  இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் வழக்கை நீட்டித்துள்ளது . இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் எந்த இடையூருமின்றி வேலை செய்யலாம் என கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து சின்மயி தனது டிவிட்டரில் டப்பிங் யூனியன் செகரட்ரி ஒருவர் தன்னை திட்டி அனுப்பிய மெசேஜை மேற்கோள் காட்டி நீங்கள் அன்னைக்கு அப்படி பேசியிருந்தீங்க, ஆனால் பாருங்க நான் தற்போது டப்பிங் யூனியன்ல சேர்க்கப்பட்டுடேன் என அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு டுவீட்டை போட்டுள்ளார். இதனை பார்த்த பலர் சின்மயியை பாராட்டி வருகின்றனர்.