திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:59 IST)

வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும்: பிரபல நடிகருக்கும் நீதிமன்றம் உத்தரவு..!

பிரபல நடிகர் மூன்று கோடி ரூபாய் கடனை 18 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விமல் நடித்து தயாரித்த ’மன்னார் வகையறா’ என்ற திரைப்படத்திற்காக ரூபாய் 5 கோடி கடன் பெற்று இருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திரும்ப தருவதாக விமல் கூறிய நிலையில் பணத்தை கொடுக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் விமல் மீது கடன் கொடுத்த கோபி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே விமல் மற்றும் கோபி இடையே சமரச ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று கோடி பணத்தை ஒரு ஆண்டுக்குள் வட்டியுடன் திருப்பி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒப்பந்தத்தின் காலம் முடிவடைந்த பின்னரும் விமல் பணம் தராததால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து மூன்று கோடி ரூபாய் கடனை 18 சதவீத வட்டியுடன் நடிகர் விமல் திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பெற்றுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva