‘காலா’ வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் மீது போடப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினி நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காலா’. நானா படேகர், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.
‘காலா’ படத்தின் மூலக்கதை மற்றும் தலைப்பு என்னுடையது என சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அப்போது, ‘காப்புரிமை சட்டத்தின் கீழ்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும்’ என தனுஷ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தியதுடன், வழக்கையும் தள்ளுபடி செய்தார்.