1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (17:26 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் புலி

5. தனி ஒருவன்:


 
இந்த ஆக்ஷன் த்ரில்லர் கடந்தவார இறுதியில் 5.38 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 6.48 கோடிகள்.

4. மசாலா படம்:


 
மசாலா படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படத்தின் சென்னை வசூல் 13.60 லட்சங்கள்.

3. மாயா:


 
நயன்தாரா நடித்துள்ள மாயா சென்ற வார இறுதியில் 14.90 லட்சங்களை வசூலித்து 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை மாயாவின் சென்னை வசூல், 2.99 கோடிகள்.

2. ஜாஸ்பா:


 
ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ஜாஸ்பா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான கொரியன் படத்தின் ரீமேக்கான இப்படம் முதல் மூன்று தினங்களில் 16.81 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

1. புலி:


 
அதே முதலிடத்தில் புலி. சென்ற வார இறுதியில் சென்னையில் 76.50 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் மட்டும் 4.45 கோடிகளை தனதாக்கியுள்ளது.