ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (12:33 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முழுமையாக ஆக்கிரமித்த கபாலியும், ஹாலிவுட் படங்களும்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முழுமையாக ஆக்கிரமித்த கபாலியும், ஹாலிவுட் படங்களும்

5. ஸ்டார் ட்ரெக் பியாண்ட் (ஆங்கிலம்)
 
சென்ற வார இறுதியில் இந்த ஆங்கில திரைப்படம் 1.73 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. நேற்று - ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 7.51 லட்சங்கள்.
 
4. கோஸ்ட் பஸ்டர்ஸ் (ஆங்கிலம்)
 
இந்த ஆங்கில திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் வசூலித்தது 7.80 லட்சங்கள்.
 
3. த பிஎஃப்ஜி (ஆங்கிலம்)
 
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்தியாவில் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 12 லட்சங்கள்.
 
2. லைட்ஸ் அவுட் (ஆங்கிலம்)
 
இந்த ஆங்கில ஹாரர் திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 16.84 லட்சங்கள். சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை ஹாலிவுட் படங்கள் கைப்பற்றியது இதுவே முதல்முறை.


 
 
1. கபாலி
 
கபாலி இந்த வாரமும் அதே முதலிடத்தில். முதல் வார இறுதியில் மூன்றரை கோடிகள் அளவுக்கு வசூலித்த படம், இரண்டாவது வார இறுதியில் 2.21 கோடிகள் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 8.30 கோடிகள்.