வஞ்சனையின்றி வாரிவழங்கத் தயாரான நடிகை

cauveri manickam| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (17:16 IST)
தெலுங்கில் காட்டும் கவர்ச்சியை, தமிழிலும் வாரிவழங்கத் தயாராகவே இருக்கிறாராம் நடிகை. 
கருணை உள்ளம் கொண்ட சமூக சேவகியின் பெயரைப் பின்பாதியாகக் கொண்ட ‘சென்னை’ படத்து நடிகை, துபாயைச் சேர்ந்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்த நடிகை, ‘சென்னை’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

சில தமிழ்ப் படங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துள்ள நடிகை, அக்கட தேசத்தில் மட்டும் அளவில்லாமல் கவர்ச்சியை வாரி வழங்குகிறாராம். அவர் நடித்த தெலுங்குப் படங்களைப் பார்த்தவர்கள், ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்ற ரேஞ்சுக்கு ஆச்சர்யப்படுகிறார்கள். இந்தத் தகவல், நடிகையின் காதுக்கும் வந்திருக்கிறது. தமிழிலும் வாய்ப்புகள் இல்லாததால், அந்த கவர்ச்சி விஷயத்தை இங்கு அப்ளை செய்யப் போகிறாராம். எப்போது அந்தச் சம்பவம் நடக்கும் என ஆவலோடு காத்திருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :