‘தாதா 87’ படத்தில் இணைந்து நடிக்கும் சாருஹாசன், ஜனகராஜ்...


Murugan| Last Modified செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (18:40 IST)
நடிகர் ஜனகராஜ் மற்றும் சாருஹாசன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.

 

 
30 வருடங்களுக்கு முன்பு அதாவது, 80களில் குணச்சித்திர வேடங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஆவார். அதேபோல், குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் தனக்கென முத்திரையை பதித்தவர் நடிகர் ஜனகராஜ். 
 
ஆனால், நடிகர் ஜனகராஜ், கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு, அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் செட்டில் ஆகி விட்டார். சாருஹாசன் மட்டும் அவ்வப்போது சிறு சிறு வேடங்களில் சினிமாவில் தலை காட்டி வருகிறார். 
 
இந்நிலையில், அவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘தாதா 87’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாருஹாசன் தாதா வேடத்திலும், ஜனகராஜ் ஓய்வு பெற்ற அதிகாரி வேடத்தில், கதாநாயகியின் தந்தையாக நடிக்கிறார்.


 

 
இந்த படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தின் இப்படத்தின் போஸ்டரை நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டார்.
 
ஜனகராஜை மீண்டும் வெள்ளித் திரையில் பார்க்க சினிமா ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :