செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (19:58 IST)

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு...பிரபல நடிகை மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும்    நடிகராக இருந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டடு ஜூன் 14 ஆம் தேதி  தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவில்  போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணையைத் தொடங்கி விசாரித்து வருகின்றனர்.

இதில், பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த பலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் வழக்கில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில்  ஜாமீன் பெற்றார்.  அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தியும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்.

இதையடுத்து, சுஷாந்த் சிங் ராஜபுத்தின் மரணம் தொடர்பான வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர்35 பேர் மீது   குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் போதைப்பொருள் கும்பலிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருல் வாங்கியுள்ளனர். அதில் ரியா சக்ரவர்த்தி, இந்தக் கஞ்சாவைப் பெற்று சுஷாந்திடம் கொடுத்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியா போதைப் பொருள் குழுவினருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.