வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:23 IST)

லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார்.. தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை

மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்த நிலையில் மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகள் ஊழல் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நேற்று நடிகர் விஷால் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக குற்றசாட்டு கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது
 
 இந்த எச்சரிக்கை விஷாலை பொருத்தவரை முதல் கட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva