ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:53 IST)

”முதல்ல சிலுக்க போடணும்..?” மார்க் ஆண்டனியில் ஆபாச வசனங்கள்! – கட் பண்ணி தூக்கிய சென்சார் போர்ட்!

Mark antony
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் பல ஆபாச வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டுள்ளது.



தமிழில் த்ரிஷா இல்லைனா நயன்தாரா, ஏஏஏ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது இவரது இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கேங்க்ஸ்டர், டைம் ட்ராவல், ஆக்‌ஷன் என ஒரு கமர்ஷியல் பேக்காக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே வைரலாகியுள்ளது.

இதில் சில காட்சிகளில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை அட்வான்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரீக்ரியேட் செய்துள்ளார்கள். செப்டம்பர் 15ல் வெளியாகும் இந்த படம் சென்சார் குழுவிற்கு தணிக்கைக்கு சென்ற நிலையில் படத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ள காட்சிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதில் ஆரம்பத்தில் பல இடங்களில் இடம் பெறும் கெட்ட வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. அதுபோல “மார்க்கை போடுறதுக்கு முன்னாடி முதல்ல சிலுக்க போடணும்” போன்ற இரட்டை அர்த்த வசனங்களும் சென்சார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான த்ரிஷா இல்லைனா நயந்தாரா படமும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற சிலவற்றுக்காக சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Censor certificate


Edit by Prasanth.K