திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:54 IST)

இனி எனக்கு யார் துணை? செல்முருகனின் உருக்கமான டுவிட்டர் பதிவு

இனி எனக்கு யார் துணை? செல்முருகனின் உருக்கமான டுவிட்டர் பதிவு
விவேக்கின் மேனேஜராக இருந்த செல் முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக்கின் மரணம் குறித்து உருக்கமான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இனி எனக்கு யார் துணை என்றும் எனக்கு அவரை தவிர வேறு யாருமே இல்லை என்றும் உருக்கமாக பதிவு செய்திருப்பது படிப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது. அந்த ட்விட்டின் பதிவு இதோ:
 
ஓர் மரணம் என்ன செய்யும்
 
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்
 
சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்
 
சிலர் RIPபுடன் கடந்த போவார்கள்
 
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்
 
சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்
 
ஆனால் அண்ணா...
 
உண்மையான ஜீவன்
 
என் உயிர் தோழன்
 
என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண
 
காற்றில் கரைந்து விட்டாயே!
 
இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்!
 
இனி என் முருகனுக்கு யார்? துணை
 
விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்?
 
இனி அவனுக்கு
 
யார்? துணை..
 
யார்? துணை....
 
யார்? துணை...... 
 
இவ்வாறு செல்முருகன் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.