செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2017 (10:35 IST)

மெர்சல் குறித்து பிரபலத்தின் சுவாரஸ்ய தகவல்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி அட்லியின் பிறந்த நாளில் வெளிவரவுள்ளது.

 
 
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டீசர் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட் ராமன் படம் குறித்து கூறுகையில், மெர்சல் பட ஃபஸ்ட் லுக்கிற்காக விஜய் மற்றும் அட்லி இருவரும்  படத்திற்காக  வெளியாகும் முதல் போஸ்டர் குறித்து பயந்தனர். அதனால் 10 மணிக்கு ஷுட்டிங் என்றால் விஜய் 8.30 மணிக்கே வந்து மேக்கப் போட்டு தயாராகி விடுவார். முதல் ஃபஸ்ட் லுக்கிற்காக 2000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அதில் அனைத்திலும் இருந்து 3  போஸ்டர் தேர்ந்துக்கப்பட்டது.
 
காளை தனியாகவும், விஜய்யை தனியாகவும் எடுத்து அதை ஒன்றாக இணைத்தோம். இறுதியில் ஃபஸ்ட் லுக் மிகவும் நன்றாக  வந்ததாகவும் கூறியுள்ளார்.