பிரபல நடிகரின் புதிய படம் தொலைகாட்சியில் ரிலீஸ்
சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான படம் ஏலே. தியேட்டர் உரிமையாளர்களுக்கும், இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.
இந்நிலையில் தற்போது இன்னொரு புதிய படம் தொலைக்காட்சியில் ரிலிசாகவுள்ளது.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்த்தில் நடித்த கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்பத். இப்படத்தை பிரபாகரன் இயக்கியுள்ளார். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படம் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.