கமலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்கள் யார் தெரியுமா?
கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் யார் எனத் தெரியவந்துள்ளது.
விஜய் டி.வி.க்காக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் கமல். இதில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது. நடிகைகள் அமலா பால், ராய் லட்சுமி, சஞ்சிதா ஷெட்டி, உமா ரியாஸ், சஞ்சனா சிங், சிம்ரன், கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, நடிகர்கள் ராதாரவி, ராகவ், அமித் பார்கவ், தாடி பாலாஜி, அரசியல்வாதிகள் ஹெச்.ராஜா, நாஞ்சில் சம்பத் ஆகிய 14 பேரும்தான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதற்கான பிரமாண்டமான செட், சென்னை – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் பிரபலங்கள் தங்கியிருப்பதுதான் போட்டி. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது.