வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (17:45 IST)

கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

karthi
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
விசா முறைகேடு தொடர்பான வழக்கு கார்த்திக் சிதம்பரம் மீது நடந்து வரும் நிலையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்
 
ஏற்கனவே கடந்த மே மாதம் 17ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் தொடர்புடைய ஒன்பது இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் சோதனை செய்து வருவதாகவும் பீரோவின் சாவி பெறப்பட்டு பீரோ முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது